உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. வாயால் செயற்கை சுவாசம் என்பது சுவாசம் நின்ற நபரின் வாய் மீது சுத்தமான துணி அல்லது கைக்குட்டை வைத்து தன் வாயால் காற்றை ஊதி நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் ஒரு அவசர முதலுதவி முறையாகும்.
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட நிலையில், குழந்தையின் உடல் மெதுவாக நீல நிறமாக மாறத் தொடங்கியதை கவனித்த மருத்துவர் ஷிப்ரா சிங், உடனடியாக அவசர சிகிச்சையில் ஈடுபட்டார்.
அங்கு தேவையான நவீன மருத்துவ உபகரணங்கள் முழுமையாக இல்லாத சூழலிலும், அவர் பதற்றமின்றி குழந்தைக்குத் தனது வாயால் செயற்கை சுவாசம் அளித்து பெண் மருத்துவர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.