தவெக தலைவர் விஜய் நான்காவது முறையாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், இன்று காலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தவெக தலைவர் விஜயுடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.