கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, பெரிய நெகமம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக “முதலமைச்சரின் தாயுமாணவர்” திட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று நியாய விலை பொருட்கள் வழங்கப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தை பயனாளிகளுக்கு நியாய விலை பொருட்களை வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, பெரிய நெகமம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். தமிழக “முதலமைச்சரின் தாயுமாணவர்” திட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று நியாய விலை பொருட்கள் பெரிய நெகமம் பேரூராட்சி தலைவர் சபரி கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், காளியப்பம்பாளையம் கிராமம் மாரப்பன் கவுண்டர் வீதியில் உள்ள தெய்வானை முருகசாமி இல்லத்துக்கே சென்று குடும்ப அட்டைக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. அது சமயம், பேரூர் கழகச் செயலாளர் ராசு(எ) முத்துக்குமார், நெகமம் கூட்டுறவு பண்டகசாலை செயலாளர் பாக்கியலட்சுமி, துணைச்செயலாளர் ஆறுச்சாமி, நியாய விலை கடை விற்பனையாளர் அக்கம்மாள் கார்த்திக், தனபால் மற்றும் கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.