‘டெஹ்ரான் டைம்ஸ்’ முதல் பக்கத்தில், “நரகத்துக்கு வருக” என்ற தலைப்பில், ”ஈரான் மண்ணில் காலடி வைக்கும் அமெரிக்க படை வீரர்கள் சவப்பெட்டியில் மட்டுமே திரும்பி செல்வார்கள்” என ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்திக்கு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இன்னும் போர் முழுவதுமாக முடியவில்லை. ஈரான் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் ஈரான் ஒருபோதும் சரணடையாது. முடிந்தவரை தாய்நாட்டை காக்க படை வீரர்கள் போராடுவார்கள். ஈரானை தாக்கியோரை சும்மா விடமாட்டோம் என்று கூறி பதிலடி தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. இதனால் ஈரான் போர் முடிவுக்கு வருவதில் பிரச்சனை உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ”பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கியது. இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கில் பல ராணுவ வியூகங்களை மேற்கொள்ளும் நோக்கத்தில் அமெரிக்க கூடுதல் படைகளை மத்திய கிழக்கிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கிற்கு ஆயிரக்கணக்கான பாராசூட்டில் பறந்து தாக்குதல் நடத்தும் வீரர்களும், கடற்படை வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கூடுதல் படை வீரர்கள் விரைவில் இணைய உள்ளனர்” என செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் ஆங்கில நாளிதழான ‘டெஹ்ரான் டைம்ஸ்’ முதல் பக்கத்தில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை செய்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “நரகத்துக்கு வருக” என்ற தலைப்பில் வெளியாகி உள்ள செய்தியில், ”ஈரான் மண்ணில் காலடி வைக்கும் அமெரிக்க படை வீரர்கள் சவப்பெட்டியில் மட்டுமே திரும்பி செல்வார்கள்” என ‘டெஹ்ரான் டைம்ஸ்’ எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.