போலியான விளம்பரங்களை கண்டும், விலை மலிவுள்ள பொருட்களை கண்டு வாங்க ஆசைப்பட்டு பணத்தை வீணாக்க வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம், OLX , பேஸ்புக் போன்ற செயலிகளில் மக்களை கவரும் வகையில் விளம்பரங்களை தயாரித்து போலியான பொருட்களையும் விற்பனை செய்து பணப்பரிப்பில் ஈடுபடும் கும்பல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெருகி வருகிறது. இது போன்ற மோசடியில் ஈடுபடும் கும்பலை காவல்துறையினர் உடனடியாக கண்டறிந்து அவர்களை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தும் போது போலியான விளம்பரங்களை கண்டும், விலை மலிவுள்ள பொருட்களை கண்டு வாங்க ஆசைப்பட்டு பணத்தை வீணாக்க வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.