குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுப்பது எவ்வாறு மற்றும் வரதட்சனை தடுப்புச் சட்டம் மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் குறித்து மூன்று நாள் கருத்தரங்கம் நடைபெற்று வருகின்றது.
நாடெங்கும் சமீபகாலமாகவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆகையால், தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் அறிவுறுத்தலின்படி, பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்திடும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அரியலூரில் கருணா- உணவகமுள்ள செல்லாஸ் கூட்டரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையில் மூன்று நாள் கருத்தரங்கம் தொடங்கியது. கருத்தரங்கத்தினை அரியலூர் வருவாய் கோட்டாச்சியர் கோவிந்தராஜ் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.

அரியலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் பிறத்துறை பணியாளர்கள் 50 மேற்பட்டோர் பங்கேற்ற இக்கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட சமூக நல அலுவலர் த. அனுராபூ நடராஜ மணி வரவேற்றார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் த. கோமதி கலந்து கொண்டு பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான சட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் அல்லி வரதட்சனை தடுப்புச் சட்டம் மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் குறித்து விளக்கவுரை வழங்கினார். இறுதியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் த. சரவணன் நிகழ்வில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுப்பது எவ்வாறு என்பது குறித்து சிறப்புரை ஆற்றினார்.