மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினை கண்டித்து, அரியலூர் இரயில்வே முதுநிலை பிரிவு பொறியாளர் அலுவலகம் முன்பு, SRMU அரியலூர் கிளை நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் இரயில்வே முதுநிலை பிரிவு பொறியாளர் அலுவலகம் (நிரந்தர பாதை) முன்பு SRMU அரியலூர் கிளை செயலாளர் த. செல்வகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் SRMU அரியலூர் கிளை தலைவர் வேல்முருகன், உதவி தலைவர்கள் வீரமுத்து, உதவி செயலாளர்கள் ப. சிவக்குமார், ரகு, மணிவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் SRMU அரியலூர் கிளை பொருளாளர் ம. கார்த்திக் வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் விரோத, நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை வாபஸ் பெற வேண்டும், 2023 முதல் வழங்க வேண்டிய CRC பதவி உயர்வுகளை அனைத்து கேட்டகிரி -களுக்கும் காலதாமதமின்றி வழங்கிட வேண்டும், 8 -வது ஊதியக் குழுவை உடனே அமைத்து, AIRF/JCM-ன் Terms of Reference ஐ உத்தரவாக வெளியிட வேண்டும், சம்பளக் கமிஷன்கள் மூலமாக ஓய்வூதிய நிர்ணய முறையை உறுதி செய்திட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும், 3 லட்சத்திற்கும் மேலான காலியிடங்களை நிரப்பிட ஆண்டு தோறும் RRB/RRC தேர்வுகளை நடத்திட வேண்டும், அனைத்து தேர்வுகளையும் வழக்கம் போல ரயில்வே நிர்வாகமே நடத்த உத்தரவிட வேண்டும், ரயில்வே துறையை தனியார் மயம், அவுட்சோர்சிங் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் SRMU இளைஞரணி தலைவர் முத்தமிழ்செல்வன், மகளிர் அணி நிர்வாகி சுகன்யா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்தில் உயிரிழந்த 3 குழந்தைகளுக்கு , SRMU நிர்வாகிகள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் முடிவில் SRMU அரியலூர் கிளை உதவி செயலாளர் வி கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.