கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி 4-வது-வார்டு ஆம்பரோஸ் நகர் பகுதியில் சிறுவர் விளையாட்டு பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த இடத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி குப்பை கிடங்கு அமைக்க திட்டமிட்டு பணிகளைத் தொடங்கியதால் அப்பகுதியில் மக்கள் அதிருப்தி. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் போக்கு காட்டி வந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்புத்தூர் மாவட்ட மேயர் திருமதி ரங்கநாயகி மற்றும் மாவட்டச் செயலாளர் ரவி அவர்கள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு குப்பை கிடங்கு அமைக்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, இந்த இடத்தில் சிறுவர் பூங்கா அமைத்து தரப்படும் என்று கோவை மாவட்ட மேயர் திருமதி ரங்கநாயகி அவர்கள் உத்தரவாதம் அளித்தார். உத்தரவாதத்தின் பெயரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.