இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T -20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதில் இங்கிலாந்தின் நாட்டிங்காமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானம் முதல் T -20 போட்டியில் இங்கிலாந்தை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அபாரம் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேப்டனாக செயல்பட்ட 51 பந்துகளில் 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என தனது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் T-20 -யில் ஹர்மன்ப்ரீத்துக்கு அடுத்ததாக சதம் விளாசிய 2-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்தார்.
சர்வதேச T -20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் , ஒருநாள் போட்டிகளில் நான்காவது இடத்திலும் ஸ்மிருதி மந்தனா இருக்கின்றார். மேலும் T -20 போட்டி, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என அனைத்து வடிவ போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஸ்மிருதி மந்தனா ஆவார்.
மகாராஷ்டிராவின் மும்பையில், ஒரு மார்வாரி இந்து குடும்பத்தில், ஸ்மிதா மற்றும் ஸ்ரீனிவாஸ் மந்தனா என்ற தம்பதியினருக்கு ஸ்மிருதி மந்தனா மகளாக 1996-ஆம் ஜூலை மாதம் 18 -ந் தேதி பிறந்தார். ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஒரு ரசாயன விநியோகஸ்தராகவும், தாயார் ஒரு இல்லத்தரசியாகவும் உள்ளனர்.
ஸ்மிருதி மந்தனாவுக்கு இரண்டு வயதாக இருந்தபோது, அவரது குடும்பம் மகாராஷ்டிராவின் சாங்லியின் புறநகர்ப் பகுதியான மாதவ்நகருக்கு குடிபெயர்ந்தனர். அங்கு ஸ்மிருதி மந்தனா பள்ளிப் படிப்பை முடித்தார். சாங்லியில் உள்ள சிந்தாமன் ராவ் வணிகக் கல்லூரியில் ஸ்மிருதி மந்தனா பயின்றார். ஸ்மிருதி மந்தனாவின் தந்தை சாங்லிக்காக மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடினார், அதே போல் அவரது சகோதரர் ஷ்ரவனன் மகாராஷ்டிரா மாநில 16 வயதுக்குட்பட்ட போட்டிகளில் விளையாடி உள்ளார்.
தந்தை மற்றும் சகோதரர் விளையாடுவதை பார்த்தது ஸ்மிருதி மந்தனாவை விளையாட்டில் ஈடுபடத் தூண்டியது. இதனைத் தொடர்ந்து 3 வயதில் சகோதரர் வலைப்பயிற்சிக்கு பந்து வீச தொடங்கிய ஸ்மிருதி மந்தனா 9 வயதில், மகாராஷ்டிராவின் 15 வயதுக்குட்பட்ட அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2013 -ஆம் ஆண்டில் இரட்டை சதம் அடித்து அனைவரின் கவனத்தை தன் பக்கம் இழுத்த ஸ்மிருதி மந்தனா 11 வயதில், குஜராத் அணிக்கு எதிரான மகாராஷ்டிரா அணிக்காக 19 வயதுக்குட்பட்ட அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் போட்டியில் 150 பந்துகளில் 224 ரன்கள் அடிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் கவனத்தை இழுத்தார்.
2014 -ஆம் ஆண்டு இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்மிருதி மந்தனா முதன் முறையாக விளையாடினார். முதல் இன்னிங்ஸில் 22 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் எடுத்து இந்திய மகளிர் அணியின் வெற்றிக்கு ஸ்மிருதி மந்தனா உதவினார். 2015-16 ஆம் ஆண்டில் இந்திய மகளிர் அணியின் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பெல்லரிவ் ஓவலில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 109 பந்துகளை 102 ரன்கள் எடுத்து ஸ்மிருதி மந்தனா தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
2016 சேலஞ்சர் டிராபியில் , ஸ்மிருதி மந்தனா இந்தியா ரெட் அணிக்காக பல ஆட்டங்களில் மூன்று அரை சதங்களை எடுத்தார். மேலும் இந்தியா ப்ளூவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 82 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் எடுத்து ஸ்மிருதி மந்தனா இந்தியா ரெட் அணி கோப்பையை வெல்ல உதவினார். மேலும் 192 ரன்களுடன், இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா மாறினார்.
மேலும், 2016 செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் பிக் பேஷ் லீக் எனப்படும் T – 20 போட்டிக்கு ஹர்மன்ப்ரீத் கவுருக்கு அடுத்து ஸ்மிருதி மந்தனா பிரிஸ்பேன் ஹீட் அணியுடன் ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஜனவரி 2017 -ஆம் ஆண்டு மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிராக விளையாடியபோது , தனது பந்து வீச்சின் இறுதி பந்தில் முழங்காலில் காயம் ஏற்பட்டதால் பீல்டிங் செய்யும் போது ஸ்மிருதி மந்தனா கீழே விழுந்தார். அப்போது ஸ்மிருதி மந்தனா முன்புற தசைநாரில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரால் 2017 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியிலும், நான்கு அணிகளுக்கு இடையேயான போட்டிகளிலும் ஸ்மிருதி மந்தனா விளையாட முடியாமல் போனது.
காயத்திலிருந்து மீண்டு, 2017 உலகக் கோப்பைக்கான அணியில் ஸ்மிருதி மந்தனா இடம் பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக 90 ரன்கள் எடுத்து ஸ்மிருதி மந்தனா உலகக் கோப்பையைத் தொடங்க, தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். 2017 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடிய வீரங்கனைகள் வரிசையில் ஸ்மிருதி மந்தனா ஒருவர் ஆவார்.
2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகளிர் T-20 சர்வதேச போட்டியிலும் இந்தியாவுக்காக ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்தார், மேலும் 2017–18 இந்திய மகளிர் அணி முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதத்தை 30 பந்துகளை ஸ்மிருதி மந்தனா எடுத்தார். 2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 -ந் தேதி மகளிர் சூப்பர் லீக்க் போட்டியில் தனது முதல் சதத்தை ஸ்மிருதி மந்தனா அடித்தார்.
2018 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை T -20 போட்டிக்கான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா இடம் பெற்று WT20I போட்டிகளில் 1,000 ரன்கள் எடுத்த மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமைய ஸ்மிருதி மந்தனா பெற்றார். அடுத்து ICC மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாகவும் , ICC மகளிர் ஒருநாள் போட்டி வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2019 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளுக்கான இந்திய மகளிர் T- 20 அணியின் இளம் வயது கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டார். அதையடுத்து 2019 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்திற்கு எதிராக மகளிர் T-20 போட்டியில் 24 பந்துகளில் அதிவேக அரைசதம் ஸ்மிருதி மந்தனா அடித்து சாதனை படைத்தார். மேலும் 2019 -ஆம் ஆண்டு மே மாதம் CEAT சர்வதேச கிரிக்கெட் விருதுகள், சர்வதேச பெண் கிரிக்கெட் வீராங்கனை விருதுகளை ஸ்மிருதி மந்தனா வென்றார் . மேலும் 2019 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் போது , WODI-களில் 2,000 ரன்களை எடுத்த மூன்றாவது வேகமான வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆனார்.
2021 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே ஒரு போட்டிக்கான இந்திய டெஸ்ட் அணியிலும் ஸ்மிருதி மந்தனா இடம் பெற்று முதல் இன்னிங்ஸில், ஸ்மிருதி மந்தனா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றார்.
2022 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றார். 2022 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய மகளிர் அணியின் துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டார். மேலும் 2022 -ஆம் ஆண்டு ஷி ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா பங்கு பெற்றார்.
2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி நடைபெற்ற WPL ஏலத்தில் ₹3.4 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஸ்மிருதி மந்தனாவை வழங்கியது, இதன் மூலம் ஸ்மிருதி மந்தனா ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார், மேலும் 2024 -ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் WPL போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பட்டத்தை வென்றது.
மேலும் 2024 -ஆம் ஆண்டில் ஸ்மிருதி மந்தனா T -20 போட்டிகளில் 763 ரன்கள் எடுத்து ஒரு வருடத்தில் T -20 வரலாற்றில் எந்த வீராங்கனையும் எடுத்த அதிகபட்ச ரன்களை எடுத்து சாதனை ஸ்மிருதி மந்தனா படைத்தார். மகளிர் T -20 போட்டிகளில் 30 அரை சதங்களை கடந்து நியூசிலாந்து வீராங்கனை சுசானா வில்சன் பேட்ஸ் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்தார். இது மட்டுமின்றி 2024 -ஆம் ஆண்டு 8 அரை சதங்கள் அடித்து மிதாலி ராஜின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்தார்.
ஒருநாள் போட்டிகளில் 4,000 ரன்கள் எடுத்த வேகமான இந்திய பெண்கள் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றார். 2025-ஆம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி 70 பந்துகளில் அதிவேகமாக சதத்தை ஸ்மிருதி மந்தனா பூர்த்தி செய்தார் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10 சதங்களை அடித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையையும் ஸ்மிருதி மந்தனா பெற்றார். இப்படி நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் சரித்திர நாயகி “ஸ்மிருதி மந்தனாவின்” சாதனைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது.