கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 123 -வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரியலூர் சாய்பாபா மெட்ரிக் பள்ளி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ். எம். சந்திரசேகர் தலைமையில், பள்ளி தாளாளர் புனிதவதி சுந்தரேசன் அவர்கள் முன்னிலையில், பள்ளி முதல்வர் பிரசன்ன தேவி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.,மேலும், மாணவர்கள் காமராஜரை பற்றி பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் அவர்களும் பூண்டி சந்தானம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆசிரிய பெருமக்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.