தென்காசி மாவட்டம், வள்ளி நகர் பகுதியைச் சேர்ந்த மேள இசைக்கலைஞர் முருகேசன் என்பவர் கிணற்றில் விழுந்த சம்பவம் தொடர்பாக வனவேங்கைகள் கட்சி தலைவர் இரணியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், வள்ளி நகர் பகுதியைச் சேர்ந்த குறவர் பழங்குடி சமூகம் மேள இசைக்கலைஞர் முருகேசன் என்பவர் பாவூர்சத்திரம் மயிலாபுரம் பகுதியில் தொழில் சம்பந்தமாக போன இடத்தில் உடல் உபாதை கழிப்பதற்கு சென்றபோது பாதுகாப்பற்ற தனியார் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த தனியார் கிணற்றிற்கு பாதுகாப்பு வேலி போடாமல், எச்சரிக்கை அறிவிப்பு பலகை அடையாளம் படுத்தாமல் இருந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழப்பு ஏற்படுவதற்கு காரணமான கிணற்றின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சார்பில் தமிழக அரசு உரிய உதவிகள் மற்றும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி மற்றும் முருகேசன் உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆகியும் மாவட்ட அதிகாரிகளால் கண்டு கொள்ளாத அலட்சிய போக்கை கண்டித்து வனவேங்கைகள் கட்சியின் சார்பில் தென்காசி அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.இந்த மறியல் போராட்டத்தில் குறவர் சமூக பழங்குடி மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த சம்பவத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.