தமிழக முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (MGSMT) கீழ் ஆவலப்பம்பட்டியில், ஆவலாப்பம்பட்டி முதல் ஜோத்தம்பட்டி வரை தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. தமிழக முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (MGSMT) கீழ், தமிழ்நாடு முழுவதும் ரூ.8,000 கோடி செலவில் 20,000 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கிராமப்புற சாலைகளின் தரம் உயர்ந்து, கிராமப்புற மக்களின் போக்குவரத்து வசதி மேம்பட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஆவலப்பம்பட்டியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு ஆவலாப்பம்பட்டி முதல் ஜோத்தம்பட்டி வரை தார் சாலை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் க. ஈஸ்வரசாமி அவர்கள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பத்மநாபன் அவர்கள், பொள்ளாச்சி (தெ) வடக்கு ஒன்றிய செயலாளர் காணியப்பன் அவர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்.C. சியாம் பிரசாத் அவர்கள் முன்னிலையில் ஆவலப்பம்பட்டி முன்னாள் தலைவர் கணேஷ் பிரபு அவர்கள், பொள்ளாச்சி வடக்கு தனி அலுவலர் அவர்கள், பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள், சந்திராபுரம் குமார் அவர்கள், தொழில் பேட்டை கதிரேசன் அவர்கள், கழக உடன்பிறப்புகளும் மற்றும் பொதுமக்களும் இந்த பூமி பூஜை கலந்து கொண்டனர்