ரிசர்வ் வங்கி வங்கிகளில் பணப்பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு மாற்றங்களை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒரே நாளில் “செக் க்ளியரிங்” ஆகும் வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. ரிசர்வ் வங்கி வங்கிகளில் பணப்பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு மாற்றங்களை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது. ஒருபுறம் UPI டிஜிட்டல் புரட்சிகள் நடந்துவரும் வேளையில், வங்கிகளில் பல்வேறு விஷயங்கள் மிக வேகமாக டிஜிட்டல் மயமானது. மக்கள் அனைத்திற்கும் வங்கிக்கு வருவது குறைந்தது.
அதேபோல் சில செயல்பாடுகளை மேற்கொள்ள சில நாட்களாவது காத்திருக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் படிப்படியாக பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் வங்கி காசோலைகள் கிளியர் ஆவதற்கான நேரம் குறித்து ரிசர்வ் வங்கி தற்போது சூப்பர் மாற்றத்தை அறிவித்துள்ளது. இப்போது வரை வங்களில் ஒரு காசோலை கிளியர் ஆக ஒன்று அல்லது இரண்டு வேலை நாட்கள் ஆகும். ஆனால், தற்போது இந்த நடைமுறையை ரிசர்வ் வங்கி வேகப்படுத்தி உள்ளது. இனி வங்கிகளில் உங்கள் பணம் வர இரண்டு நாட்கள் வரை காத்திருக்க தேவையில்லை.. ஒரே நாளில் கிளியர் ஆகப்போகிறது.
அதன்பின்னர் அன்று மாலை 7 மணிக்குள் சம்பந்தப்பட்ட வங்கி அந்தக் காசோலைக்கு வங்கிகள் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், அது தானாகவே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட்டு, அந்த இரவே தீர்வாகி பணம் உங்களுக்கு வந்துவிடும். இந்த நடைமுறை அடுத்த அக்டோபர் 4 முதல் 2026 ஜனவரி 2-ஆம் தேதி வரை இருக்கும்.
அதேநேரம் 2026 ஜனவரி 3-ஆம் தேதி முதல், காசோலை கிளியர் முறையில், இரண்டாவது கட்டமாக இன்னும் வேகமாக மேம்படுத்தப்பட உள்ளது. இதன்படி வரும் 2026 ஜனவரி 3-ஆம் தேதி முதல், காசோலையை வாங்கியதில் இருந்து 3 மணி நேரத்திற்குள் அதற்கான ஒப்புதலை சம்பந்தப்பட்ட வங்கிகள் கண்டிப்பாக வழங்க வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, பணம் பெறும் வங்கியானது வாடிக்கையாளரின் கணக்கில் பணத்தை ஒரு மணி நேரத்திற்குள் வரவு வைக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.