பார் ஒன்றில் நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவருடன் இருந்த 3 பேர் தகராறு நடந்தி இதைத்தொடர்ந்து, ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவரை காரில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. கேரளாவில் பாரில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து ஐடி ஊழியர் காரில் கடத்தி தாக்கப்பட்ட வழக்கில் லட்சுமி மேனன் உடன் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் லட்சுமி மேனன் தலைமறைவாகியுள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அண்மையில் பாரில் இரவு 11 மணியளவில் ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் தரப்புக்கும், லட்சுமி மேன தரப்புக்கும் இடையே இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனன் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதையடுத்து, தாக்கப்பட்ட ஐடி ஊழியர் அளித்த புகாரின் பேரில் லட்சுமி மேனனுடன் இருந்த மிதுன், அனீஷ் மற்றொரு பெண் ஆகிய 3 பேரை எர்ணாகுளம் வடக்கு காவல்துறை கைது செய்துள்ளனர். லட்சுமி மேனனையும் காவல்துறை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், நடிகை லட்சுமி மேனனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை லட்சுமி மேனன் தீவிரமாகத் தேடி வருவதாகத் தகவல் கிடைத்த நிலையில் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.