நடைபெற்று முடிந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க இரண்டு முறை சந்தித்த நிலையில் விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இதனால், தவெக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடக்கூடும், சம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க உஷார் நிலையில் இருக்கும் படி உளவுத்துறை எச்சரித்தது.
இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக வேண்டி, சுமார் 16 அடி நீளம் கொண்ட வேலை அலகாகக் குத்திக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தவெக தொண்டர் இசக்கியப்பன் தீக்குளித்த சம்பவம் நமக்கு தவெக தொண்டர்களின் மனநிலையை படம் போட்டு காட்டுகிறது.
நடைபெற்று முடிந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற “மேஜிக் எண்” இல்லாத நிலையில் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்கிற வகையில், தவெக-வுக்குத் தனிப் பெரும்பான்மையை வழங்காமல், அது தனித்து ஆட்சி அமைக்க முடியாத நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக திமுக கூட்டணி கட்சிகளுடன் தவெக பேசி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது.
தவெக ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையிலும் புதன்கிழமை (மே 6-ந் தேதி) தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க சி. ஜோசப் விஜய் உரிமை கோரினார். ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் கடந்த 7-ந் தேதி இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஜோசப் விஜய் பேசி இருந்தார்.
மேலும் மே 10-ஆம் தேதிக்குள் புதிய அரசு அமையாவிட்டால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று சண்முகம் எச்சரித்தார். இதனால் காங்கிரஸ் கட்சி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மேலும் தவெகவினர் தமிழகம் முழுவதும் சலசலப்பாக பேச தொடங்கியதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறியது.
தவெகவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க கைகோர்த்துள்ள நிலையில், சிபிஐஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். நேரடியாக அங்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் நலன் கருதி நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன்.
அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், பொறுமையாக இருங்கள், நல்லதே நடக்கும் என பேசியதாக தகவல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக அதிமுக- திமுக கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி கொண்டுவர வேலைகள் நடப்பதாக வெளிவர தமிழக அரசியல் களம் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்றது.
இந்நிலையில், தவெக தலைவர் ஜோசப் விஜய், பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம் ஸ்டாலினைத்தான் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், ஸ்டாலின் ஒருமுறை கூட ஜோசப் விஜய் பெயரையே சொல்லவில்லை. தவெக தனிப்பெரும் கட்சியாக வென்று, மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி அமைக்க நெருக்கடியைச் சந்தித்தபோதும், ஜோசப் விஜய்க்கு இடையூறு ஏற்படுத்தாமல் அமைதி காத்தார்.
அதோடு, தவெக ஆட்சி அமைக்க, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவு தேவை என்ற சூழலில், அமைதி காத்து அதற்கும் ஸ்டாலின் உதவியுள்ளார். சிபிஐ, சிபிஐஎம், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தற்போதும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவே கூறியுள்ளன. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்ற ஔவையார் கூற்றை போல தவெக ஆட்சியமைக்க ஆதரவளிப்பதில் ஆட்சேபனை தெரிவிக்காமல் ஸ்டாலின் அமைதி காக்கிறார்.
தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. இதில் விஜய் 2 தொகுதிகளில் வென்றுள்ளார். இதில் ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை அதேபோல திருச்சி கிழக்கு தொகுதியை தவெக தலைவர் ராஜினாமா செய்துள்ளார். ஆகையால், தவெக எண்ணிக்கை 108-ல் இருந்து 107-ஆக குறைந்துள்ளது. மேலும் சபாநாயகருக்காக ஒரு தொகுதிகளில் எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் தான் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 234-ல் தவெக ஆட்சி அமைக்க தேவை 118 என்ற “மேஜிக் எண்ணை அடைய 12 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
தற்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் சப்போர்ட் தவெகவிற்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் தவெகவின் பலம் 112 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 7 எம்எல்ஏக்கள் இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க என்ற சூழ்நிலையில் தான் திமுக கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், வெளியில் இருந்து தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிக்க, விசிக, சிபிஐ, சிபிஐஎம், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள், ஜோசப் விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் மூலம் 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்ற பரபரப்பான சூழ்நிலையில் தவெக தலைவர் மீண்டும் ஆளுநர் அவர்களை சந்தித்து ஆதரவு கடிதங்களை சமர்ப்பித்தார். இதனை தொடர்ந்து தவெக தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் அடையாத வெற்றியும் இல்லை. சந்திக்காத தோல்வியும் இல்லை என்பதை உணர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டாம் எனக் கூறினால் விசிக, இரு கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவு ஜோசப் விஜய்க்கு கிடைத்திருக்காது என்பது அரசியல் அறிந்தவர்கள் அனைவரும் அறிந்த உண்மை.
இதிலிருந்து பதவி தோளில் கிடக்கும் துண்டைப் போல, கொள்கை என்பது கட்டி இருக்கும் வேட்டியைப் போல’ என்று கலைஞர் செல்லவதைபோல இந்தச் சூழலை மென்மையாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின் கையாண்டுள்ளார். ஆகமொத்தத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக 108-ல் துடிதுடித்த போது ‘தலையா, தலைப்பாகையா என்றால் தலையைக் காக்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கலைஞர் கூறுவதைபோல திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு வாழ்வளித்தது என்பதே நிதர்சனமான உண்மை.