“நீ செத்தியா, செத்தியா” என சத்தம் போட்டபடி அவரது உடலை சாக்கடை கால்வாயில் இருந்து தூக்கி வெளியில் போட்டு விட்டு, அதன் முன்பு உட்கார்ந்து கொண்டு, அவரது உடலையே பார்த்தபடி இருக்கிறார் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதி பாரதி – ஸ்வேதா இருவரும் கிரேஷ் மற்றும் கேப்ரியல் ஆகிய 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் 9 வருடங்களுக்கு முன்பே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
பாரதி பெயிண்டர் வேலையும், ஸ்வேதா, ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வருகிறார். சமீப காலமாகவே ஸ்வேதாவின் நடத்தையில் பாரதிக்கு சந்தேகம் வலுத்து வந்துள்ளது.. இதனால் தகராறும் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஸ்வெதா மனம் வெறுப்படைந்து, ஏபிடி சாலையில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் வழக்கம்போல் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, அப்படியே வேலைக்கும் ஸ்வெதா செல்ல தெருவில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த பாரதி, ஸ்வேதாவை வழிமறித்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதற்கு ஸ்வேதா மறுக்கவும், தெருவிலேயே தகராறு வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாரதி, ஸ்வேதாவை விரட்டி சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றார்.. உடனே ஸ்வேதா கத்தி கூச்சலிடவும், பொதுமக்கள் திரண்டு வந்து பாரதியை பிடிக்க முயன்றார்.
இதற்கிடையே பாரதி நடுசாலையில் சுவேதாவை குத்தி கொலை செய்த வீடியோக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கத்தியால் குத்தப்பட்ட ஸ்வேதா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். அப்போது ஆவேசம் தீராத பாரதி, ஸ்வேதாவை தர, தரவென இழுத்து அருகே உள்ள சாக்கடைக்குள் தள்ளுகிறார்.
சாக்கடை கால்வாய்க்குள் ஸ்வேதாவை தள்ளி, அவரது கழுத்தில், கால் மற்றும் கையை வைத்து நெரித்தபடி “சாவு.. சாவு” என்று சொல்லியபடியே கொடூரமாக கொலை செய்கிறார்.இதில் சுவேதா துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்கிறார். ஸ்வேதா இறந்ததை உறுதி செய்து கொண்ட பாரதி, “நீ செத்தியா, செத்தியா” என சத்தம் போட்டபடி அவரது உடலை சாக்கடை கால்வாயில் இருந்து தூக்கி வெளியில் போட்டு விட்டு, அதன் முன்பு உட்கார்ந்து கொண்டு, அவரது உடலையே பார்த்தபடி இருக்கிறார். “இத்தனை ஆம்பளைங்க நிற்கிறீங்களே… யாராவது போய் தடுங்க” என்று ஒரு பெண்மணி கதறும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் அத்தனை பேரும் பதைபதைத்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.