சவுக்கு சங்கர் ஒரு முறை பெண்ணாக பிறக்க வேண்டும் பெண்ணாகப் பிறந்து நடிகை விஜயலட்சுமி அவர்கள் போன்று துன்பங்களையும் அவமானங்களையும் வேதனைகளையும் பட்டால் மட்டுமே அவர்களுக்கு தெரியும் என தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத் தலைவர் கி. வீரலட்சுமி தெரிவித்தார். 2011-ஆம் ஆண்டு சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, திருமண மோசடி- 7 முறை கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட புகார் அளித்திருந்த விஜயலட்சுமி, மீண்டும் 2023 ஆகஸ்ட் 28-ந் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். நடிகை விஜயலட்சுமிக்கு தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தீவிரமான ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் பெற்ற நிலையில் சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே காரசாரமாக சவால்கள் மற்றும் பதில்கள் இணையத்தில் பரவியது. மேலும், சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீமன்றம், வழக்கை ரத்து செய்ய முடியாது என்று, அதேப்போன்று 12 வாரத்துக்குள் காவல்துறை வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சீமான் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை அடிப்படையாக கொண்டு வழக்கை முடித்து வைக்கிறோம். முன்னதாக இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தனர். மேலும் நடிகை விஜயலட்சுமி மற்றும் சீமான் ஆகியோர் இருவரும் ஊடகங்களில் எதுவும் இதுதொடர்பாக இதற்கு மேல் எந்தவித பேட்டியோ அல்லது தகவலையோ வெளியிடக் கூடாது. மேலும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருந்த விஷயத்தை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் மோசடி செய்துவிட்டு சங்கர் துறையால் துரத்தி அடிக்கப்பட்ட youtube சவுக்கு சங்கர் என்னையும் நடிகை விஜயலட்சுமி அவர்களையும் அவதூறு பரப்பும் பொழுது அது அவதூறு என்று நான் காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். தமிழ்நாடு மக்களும் காவல்துறையும் அவன் என் மீதும் விஜயலட்சுமி அவர்கள் மீதும் அவதூறு பரப்பியது பொய் என்பதை நிறுபனம் செய்யும் ஆடியோ இதோ மக்களின் பார்வைக்காக .
சவுக்கு சங்கர் ஒரு முறை பெண்ணாக பிறக்க வேண்டும் பெண்ணாகப் பிறந்து நடிகை விஜயலட்சுமி அவர்கள் போன்று துன்பங்களையும் அவமானங்களையும் வேதனைகளையும் பட்டால் மட்டுமே அவர்களுக்கு தெரியும். விஜயலட்சுமி அவர்களுடைய நிலைமை என்ன என்று தெரியும் அவர்களுக்கு உதவியவர்களின் நிலைமை என்ன என்று தெரியும் . விரைவில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புகின்ற உன் வாய் நிரந்தரமாக பேசாமல் நிறுத்தப்படும் என கி. வீரலட்சுமி தெரிவித்தார்.