அமெரிக்கா அதிபர் ஏழரையை கூட்டுவது டோனால்ட் டிரம்புக்கு கை வந்த கலை. சட்டென தன் செல்போனை எடுத்த டோனால்ட் டிரம்ப், “ரஷ்ய முன்னாள் அதிபரும், பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவின் என்னை டென்ஷன் செய்துவிட்டார். எனவே ரஷ்ய பகுதிக்கு அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களை அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தி ஹாட் டாப்பிக்காக பேசப்பட கண்டுக்கொள்ளாத ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் , அமெரிக்காவின் கப்பல்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று கூறியிருக்கிறது.
ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் வோடொலாட்ஸ்கி இது குறித்து கூறுகையில், “உலகப் பெருங்கடல்களில் ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கை அமெரிக்கக் கப்பல்களை விட கணிசமாக அதிகம். டிரம்ப் குறிப்பிட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் நீண்ட காலமாகவே எங்கள் கவனிப்பில் உள்ளன. அந்த இரண்டு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களும் பயணம் செய்யட்டும், அவை நீண்டகாலமாகவே எங்கள் இலக்கில் உள்ளன” என்று கூறியுள்ளார்.
உக்ரைனை வைத்து அமெரிக்கா தற்போது ரஷ்யாவுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. ஆனால் போரில் ரஷ்யாதான் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவே நேரடியாக ரஷ்யாவுடன் மோத தயாராகிவிட்டதா? என்கிற கேள்வி டிரம்பின் உத்தரவு மீது எழுந்திருக்கிறது. நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கை அமெரிக்காவை விட குறைவாக ரஷ்யாவில் இருந்தாலும் அணு சக்தியால் இயக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் அமெரிக்காவை விட அதிகமாக ரஷ்யா வைத்து இருக்கிறது. இந்த வகை நீர்மூழ்கி கப்பல்களில் எரிபொருள் 20-30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிரப்பினால் போதுமானது.
எனவே கடலின் மேற்பரப்பில் வர வேண்டிய அவசியம் கிடையாது. சில சமயங்களில் முக்கியமான ஆபரேஷன்கள் எனில் ஓர் ஆண்டு வரை கூட கப்பல் மேலே வராமல் உள்ளேயே இருக்கும். எனவே, நீர்மூழ்கி கப்பல் விஷயத்தில் ரஷ்யாவிடம் அமெரிக்கா நேரடியாக மோத முடியுமா? என்பது சந்தேகம்தான். அமெரிக்காவின் இப்படியான யோசனையை கேட்டால் புதின் வாய்விட்டு சிரித்துவிடுவார் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.