கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், தாத்தோர் ஊராட்சி, ஆத்து பொள்ளாச்சி ஊராட்சி மற்றும் சுப்பே கவுண்டன் புதூர் ஊராட்சிகள் இணைந்து “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை சஹானா மஹாலில் நடத்தினர்.
இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, பட்டா மற்றும் சிட்டா, முதியோர் உதவித்தொகை, ஆதார் கார்டு பெயர் நீக்குதல் சேர்த்தல், மருத்துவ முகாம் உள்ளிட்ட 14 க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் சார்பில் முகம் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர்.T. யுவராஜ், ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் இமாலய யுவராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வளர்மதி கார்த்திகேயன், ஆனைமலை ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் அ. குழந்தைசாமி, ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் செ. ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் மணிகண்டன், விஜயலட்சுமி, ஆனைமலை அனைத்து ஊராட்சி செயலாளர்களும் மற்றும் தூய்மை பணியாளர்களும். திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.