ஈரோடு மாவட்டம், ஈரோடு மாநகரம் கொல்லம் பாளையம் பகுதி வார்டு எண் 56 -ல் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு நலத்திட்ட பணிகளை மக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார் அவர்கள், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள், துணை மேயர் வே.செல்வராஜ் அவர்கள்,ஈரோடு மாநகரக் கழக செயலாளர் மு. சுப்ரமணியம் அவர்கள், பகுதி கழக செயலாளர் லட்சுமண குமார், மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.