ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை பூங்காவில் அமைந்துள்ள எம்.ஏ.ஈஸ்வரன் அவர்களின் முழு திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு .பெ சாமிநாதன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து பவானிசாகர் அணையிலிருந்து தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி மற்றும் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு .பெ சாமிநாதன் ஆகியோர் இன்று கீழ் பவானி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி அவர்கள், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் அவர்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார் அவர்கள், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. சரஸ்வதி அவர்கள், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் துணை மேயர் V. செல்வராஜ் முதலியானோர் கலந்து கொண்டனர்.