இன்றைய டிஜிட்டல் உலகில் மருந்து மாத்திரைகள், ஆடைகள், காய்கறிகள், வீட்டு உபோயக பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வித நாம் பயன்படுத்து அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் வாங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் புதிது புதிதாக பல ஆஃப்கள் உருவாக்கி நம்முடைய நேரம் மற்றும் பணத்தை அதிக மிச்சப்படுத்துகிறது. ஆனாலும் இவற்றால் அவ்வப்போது ஒரு சில பிரச்சனைகள் ஏற்பாடு கொண்டே உள்ளது.
அந்த வகையில், பெங்களூரு குமாரசாமி லே-அவுட் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் மென்பொருள் பொறியாளர் பிரேம் ஆனந்த். இவர், தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், அமேசான் செயலி மூலம் சுமார் ரூ.1.85 லட்சம் மதிப்புள்ள சாம்சங் இசட் ஃபோல்டு ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் அவர் ஆர்டர் செய்த செல்போன் கூரியர் மூலமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கூரியர் நிறுவன ஊழியரும், நேற்று முன்தினம் பிரேம் ஆனந்த் வீட்டுக்கு வந்து ஒரு பார்சலை கொடுத்துவிட்டு சென்றார். உடனே அவரும், தான் ஆசையாக ஆர்டர் செய்த செல்போன் வந்ததாக நினைத்து பார்சலை பிரித்து பார்த்தார். அப்போது அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த பார்சலில் செல்போன் பாக்சுக்குள் செல்போனுக்கு பதில் ஒரு பளிங்கு கல் இருந்தது. ரூ.1.85 லட்சம் மதிப்பிலான செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்ததால் கோபம் அடைந்த பிரேம் ஆனந்த் உடனடியாக கூரியர் ஊழியரின் செல்போனுக்கு அழைத்தார்.

ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. பின்னர், பிரேமானந்த் NCRP போர்டல் மூலம் முறையான புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக காவல்துறை FIR பதிவு செய்து, இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்தது ஆன்லைன் விற்பனை நிறுவனமா? அல்லது கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களா? என்பது தெரியவில்லை. இந்த மோசடி குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.