கள்ளக்குறிச்சி காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத மனுதாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. மாதவன் அவர்களின் தலைமையில் ஒவ்வொரு வார புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி காவல் அலுவலகத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது, பொதுமக்கள் காவல்நிலையங்களில் அளித்த புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத 50 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சரவணன், திருமால், துணை காவல் கண்காணிப்பாளர், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் மனுதாரர்கள் பலர் பங்கேற்றனர்.