திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே புங்கந்துறையில் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்குவாரியினால் தினந்தோறும் 30க்கும் மேற்பட்ட லாரிகள் இரவு பகல் பாராமல் அதிக பாரம் ஏற்றி மக்களை அச்சுறுத்தும் வகையில் ஒட்டிச் செல்கிறார்கள். மேலும் சாலைகள் சேதம் அடைவதுடன் முறையான சாலைகளை பயன்படுத்தாமல் மண்ந்துட்டு பாளையம் வழியாக செல்லாண்டியம்மன் கோவில் வழியில் சென்று புங்கந்துறை வானவராய நல்லூர் முதலிபாளையம் ஊதியூர் முறையே இல்லாத சாலையில் ஓட்டிச் செல்கிறார்கள்.
அதிவேகமாக செல்லக்கூடிய லாரிகளை செல்லக்கூடிய வாகனங்கள் அளவுக்கு அதிகமான கல் ஜல்லிகள் ஏற்றி செல்வதால் ரோடு மிகவும் பழுதடைந்து குண்டும் குழியும் சாலைகள் காட்சியளிக்கின்றது. மேலும் வாகனங்கள் அதிவேகமாக செல்வத்தால் மண் புழுதி ஏற்பட்டு வீட்டுக்குள் சென்று உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், பொது மக்கள்களுக்கு மற்றும் சமூக ஆர்வலர்களும் அங்கு இயங்கி வரும் கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்க உள்ளார்கள்.