கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த லாரி மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டி இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் விழுந்தது நல்வாய்ப்பாக எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
CNG பொருத்தப்பட்ட வாகனம் என்பதால் சம்பா இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வாகனத்தை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இச்சம்பவத்தால் சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது.