41 பேரை புதைத்த இடத்தில் ஈரமும் காயவில்லை, எரித்த இடத்தில் சூடும் குறையவில்லையே ஆனால் விஜய் வீட்டிலும் அலுவலகத்திலும் இப்படியொரு கொண்டாட்டம் தேவையா? விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தையொட்டி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபிக்கு தவெக பொதுச்செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், செப்டம்பர் 13-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட பிரச்சாரத்தின் முதல் நாளே பல மணி நேரம் விஜய் தாமதமாகவே திருச்சிக்கு வந்தார். அவர் பின்னாலேயே ஏராளமானோர் வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர்.
இதனால் உள்ளூர் மக்களுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் விஜய் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய்யால் போக்குவரத்து நெரிசலும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. அத்துடன் பல மணி நேரம் தாமதமாக வந்ததால் பலர் வெயிலால் நிற்க முடியாமல் மயங்கி விழுந்தனர்.
இந்த பிரச்சாரத்திற்கு ஓய்வறை, மீட்டிங் அறை, படுக்கை அறை பேருந்தை சுற்றி நவீன ரக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு என ஏராளமான வசதிகளுடன் கேரவனை போன்ற ஒரு பேருந்து தயார் செய்யப்பட்டு அந்த பேருந்தை சுற்றி விஜய் படத்துடன் அவரது கட்சியின் கொள்கை தலைவர்களான பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜர் ஆகியோரின் படங்களும், எம்ஜிஆர், அறிஞர் அண்ணாவின் படங்களும் இடம் பெற்றிருந்தனர். அது போல் உங்கள் விஜய் நா வரேன் என்ற வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன. பேருந்தின் நிறம் கட்சி கொடியின் நிறத்தை போல் இருந்தது. இந்த வாகனம் 60 அடி நீளத்திற்கு இருந்தது.

இந்நிலையில் செப்டம்பர் 27-ந் தேதி திருவள்ளூர், வட சென்னை போக வேண்டிய விஜய் திடீரென்று நாமக்கல் மற்றும் கரூர் என்று தன் சனிக்கிழமை சுற்றுலாவை மாற்றி கரூரில் பிரச்சாரம் செய்த போது அவர் 7 மணி நேரம் தாமதமாக வந்தது. இதில் 60 அடி நீள பேருந்தை அந்த கூட்டத்தில் புகுத்தியபோது, பேருந்துக்கு வழி ஏற்படுத்திய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகமாக இருக்கிறது முன்னே செல்லாதீர்கள்னு காவல்துறை தடுக்க அதைக் கேட்காமல் அவர்கள் திட்டமிட்ட இடத்துக்கு பேருந்தைக் கொண்டுவந்து நெரிசலை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்அங்கு ஏற்கெனவே நிறைய கூட்டம் இருந்தது.
ஆனால், 30 நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை இரண்டு மணி நேரம் தாமதம் ஆகும் வகையில் மெதுவாக விஜய் கடந்து கூட்டத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரச்சார வாகனம் வந்தபிறகும் விஜய் மேலே ஏறி வருவதற்கு முழுதாக 9 நிமிடம் எடுத்திருக்கிறார்கள். மக்கள் கூடும் இடங்களில் விஜய் தனது முகத்தை காட்டி கையை அசைத்திருந்தால் அங்கிருந்த கூட்டங்கள் எல்லாம் கலைந்திருக்கும். ஆனால் விஜய்யோ அப்படி செய்யாமல் அந்த கூட்டத்தை அப்படியே கூடவே அழைத்து வந்திருக்கிறார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள், 18 பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். அப்பாவி பொதுமக்கள் பலியான தகவல் அறிந்தவுடன் முன்னாள் திமுக மற்றும் அதிமுக அமைச்சர்கள் V. செந்தில்பாலாஜி, எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பல கட்சிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக நின்றனர்.
ஆனால், விஜய் பேச்சை முடிக்கும் முன்பே ஒவ்வொருவராக கூட்டத்தில் கீழே மயக்கமுற்று விழ துவங்கிவிட்டார்கள். மக்கள் மயங்கி விழுவதை கண்டு அவர்களை மீட்பதற்கு விஜய் எந்த நடவடிக்கையும் மோற்கொள்ளவில்லை தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டார். மேலும் பெரிய உயிர் சேதம் ஏற்பட்டதை அறிந்து விஜய் மக்களை பற்றி கவலை படாமல் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார். பாதிக்கப்படட மக்களை சந்திக்காமல் தவெக தலைவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.
இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் 3 நாட்கள் கழித்து, தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், என் வாழ்க்கையில் இப்படியொரு வலி நிறைந்த சூழலை சந்தித்தது கிடையாது; மனசு முழுக்க வலி மட்டும்தான்; அதற்கு ஒரே காரணம் அவர்கள் என் மேல் வைத்துள்ள அன்பும் பாசமும் தான்; அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களோட வலிகளையும், நிலைமையையும் புரிந்துகொண்டு எங்களுக்காக பேசுன அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.
5 மாவட்டங்களில் நடைபெறாத சம்பவம் கரூரில் மட்டும் எப்படி நடைபெற்றது. மக்களுக்கு எல்லாமே தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்காங்க. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்க பேசிக்கொண்டு இருந்தோம் அதை தாண்டி எதையும் செய்யவில்லை. சிம் சார் எதாவது பழி வாங்க வேண்டிய எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு சிறிது கூட வருந்தாமல் முதல்வர் மீது விமர்சனம் செய்து அரசியல் செய்வதா என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சியாக தவெக தலைவர் விஜய் பயணித்த பிரச்சார பேருந்து, வேன்களுக்கு பனையூரில் கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
அந்த வாகனங்களுக்கு வாழை கன்று கட்டி மாலை அணிவித்து நிர்வாகிகள் பூஜை செய்துள்ளனர். அது போல் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிலும் அவருடைய கார்களுக்கு ஆயுத பூஜை கொண்டாட்டம் நடந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 41 பேர் ஏன் இறந்தோம் என தெரியாமல் விஜய்யை பார்க்க வந்த ஒரு காரணத்திற்காக இறந்திருக்கும் நிலையில் அவர்கள் இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் ஆயுதபூஜை கொண்டாட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக நம் வீடுகளில் நெருங்கிய சொந்தம் இறந்துவிட்டால் பண்டிகைகளை ஒரு ஆண்டிற்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்காவது கொண்டாட மாட்டோம். ஆனால் 41 பேரை புதைத்த இடத்தில் ஈரமும் காயவில்லை, எரித்த இடத்தில் சூடும் குறையவில்லையே ஆனால் விஜய் வீட்டிலும் அலுவலகத்திலும் இப்படியொரு கொண்டாட்டம் தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.