விஜய் பேசியது திரைப்பட வசனம் போல இருக்கிறது. திரைக்கவர்ச்சி நாட்டை ஆள முயற்சிக்கிறது. திரை மயக்கம், திரை போதையில் விஜய் உள்ளார், விஜய் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்தார். விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தையொட்டி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபிக்கு தவெக பொதுச்செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், செப்டம்பர் 13-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட பிரச்சாரத்தின் முதல் நாளே பல மணி நேரம் விஜய் தாமதமாகவே திருச்சிக்கு வந்தார். அவர் பின்னாலேயே ஏராளமானோர் வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர்.
இதனால் உள்ளூர் மக்களுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் விஜய் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய்யால் போக்குவரத்து நெரிசலும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. அத்துடன் பல மணி நேரம் தாமதமாக வந்ததால் பலர் வெயிலால் நிற்க முடியாமல் மயங்கி விழுந்தனர்.
இந்த பிரச்சாரத்திற்கு ஓய்வறை, மீட்டிங் அறை, படுக்கை அறை பேருந்தை சுற்றி நவீன ரக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு என ஏராளமான வசதிகளுடன் கேரவனை போன்ற ஒரு பேருந்து தயார் செய்யப்பட்டு அந்த பேருந்தை சுற்றி விஜய் படத்துடன் அவரது கட்சியின் கொள்கை தலைவர்களான பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜர் ஆகியோரின் படங்களும், எம்ஜிஆர், அறிஞர் அண்ணாவின் படங்களும் இடம் பெற்றிருந்தனர். அது போல் உங்கள் விஜய் நா வரேன் என்ற வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன. பேருந்தின் நிறம் கட்சி கொடியின் நிறத்தை போல் இருந்தது. இந்த வாகனம் 60 அடி நீளத்திற்கு இருந்தது.
இந்நிலையில் செப்டம்பர் 27-ந் தேதி திருவள்ளூர், வட சென்னை போக வேண்டிய விஜய் திடீரென்று நாமக்கல் மற்றும் கரூர் என்று தன் சனிக்கிழமை சுற்றுலாவை மாற்றி கரூரில் பிரச்சாரம் செய்த போது அவர் 7 மணி நேரம் தாமதமாக வந்தது. இதில் 60 அடி நீள பேருந்தை அந்த கூட்டத்தில் புகுத்தியபோது, பேருந்துக்கு வழி ஏற்படுத்திய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகமாக இருக்கிறது முன்னே செல்லாதீர்கள்னு காவல்துறை தடுக்க அதைக் கேட்காமல் அவர்கள் திட்டமிட்ட இடத்துக்கு பேருந்தைக் கொண்டுவந்து நெரிசலை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்அங்கு ஏற்கெனவே நிறைய கூட்டம் இருந்தது.
ஆனால், 30 நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை இரண்டு மணி நேரம் தாமதம் ஆகும் வகையில் மெதுவாக விஜய் கடந்து கூட்டத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரச்சார வாகனம் வந்தபிறகும் விஜய் மேலே ஏறி வருவதற்கு முழுதாக 9 நிமிடம் எடுத்திருக்கிறார்கள். மக்கள் கூடும் இடங்களில் விஜய் தனது முகத்தை காட்டி கையை அசைத்திருந்தால் அங்கிருந்த கூட்டங்கள் எல்லாம் கலைந்திருக்கும். ஆனால் விஜய்யோ அப்படி செய்யாமல் அந்த கூட்டத்தை அப்படியே கூடவே அழைத்து வந்திருக்கிறார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள், 18 பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். அப்பாவி பொதுமக்கள் பலியான தகவல் அறிந்தவுடன் முன்னாள் திமுக மற்றும் அதிமுக அமைச்சர்கள் V. செந்தில்பாலாஜி, எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பல கட்சிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக நின்றனர்.
ஆனால், விஜய் பேச்சை முடிக்கும் முன்பே ஒவ்வொருவராக கூட்டத்தில் கீழே மயக்கமுற்று விழ துவங்கிவிட்டார்கள். மக்கள் மயங்கி விழுவதை கண்டு அவர்களை மீட்பதற்கு விஜய் எந்த நடவடிக்கையும் மோற்கொள்ளவில்லை தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டார். மேலும் பெரிய உயிர் சேதம் ஏற்பட்டதை அறிந்து விஜய் மக்களை பற்றி கவலை படாமல் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார். பாதிக்கப்படட மக்களை சந்திக்காமல் தவெக தலைவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.
இந்நிலையில், பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் சீமான் இன்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.அதன்பின்னர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “விஜய் பேசியது திரைப்பட வசனம் போல இருக்கிறது. இது நல்ல அணுகுமுறை அல்ல. சிஎம் சார் எனச் சொல்வதே சின்னப்பிள்ளை பேசுவது போல இருக்கிறது. விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. இருந்திருந்தால் அவரது மொழியில் அது வெளிப்பட்டு இருக்கும். உருக்கமாக பேசி விஜய் வீடியோ வெளியிட்டிருக்க வேண்டும்.
இந்த நிகழ்வைப் பொறுத்தவரை விஜய் அந்த இடத்துக்கு பரப்புரைக்குச் சென்றதால் தான் நிகழ்ந்தது. அவர் போகவில்லை என்றால் இது நடந்திருக்காது. அப்படி என்றால் காரணம் யார்? மற்ற இடங்களில் எல்லாம் நடக்கவில்லை என்று சொல்கிறீர்கள் என்றால், அங்கும் நடந்திருக்க வேண்டும் என்கிறீர்களா? எல்லா கூட்டத்திலும் மயங்கி விழுந்தார்கள், இங்கு கூட்ட நெரிசல் அதிகம் என்பதால் மிதித்து பலர் பலியாகினர்.
கூட்டத்துக்குள் ஆள் புகுந்தார்கள், கத்தியால் குத்தினார்கள் என்கிறீர்கள். நான் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். ஒருவருக்கு கூட கத்தியால் குத்திய காயம் இல்லை. மிதித்ததில் தான் பலருக்கும் காயம். விஜய்யிடமே தண்ணீர் கேட்டார்கள். அவர் தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போடுகிறார். ஒருவரின் தேவைக்கு போடுகிறார், ஆனால் சுற்றி இருக்கும் அனைவருக்கும் தாகம் தானே? திரைக்கவர்ச்சி நாட்டை ஆள முயற்சிக்கிறது. திரை மயக்கம், திரை போதையில் உள்ளனர். விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்? சிஎம் சார் என விஜய் கூறியது சிறுபிள்ளைத்தனம். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று எந்தக் கட்சியும் தெரிவிக்கவில்லை” என சீமான் தெரிவித்துள்ளார்.