கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைகட்ட முயற்சிக்கும், தமிழகத்திற்கு உரிய நீரை தரமறுக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசை கண்டித்து நம் தமிழக பாஜக சார்பில் மாபெரும் கண்டனப் பேரணி – ஆர்பாட்டம், மற்றும் கண்டன பொதுக்கூட்டம், நேற்று தஞ்சாவூர் ரயிலடியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை மக்களின் பேராதரவுடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தேசியச் செயலாளர் மற்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் மேனன் அரவிந்த், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன், மும்பையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச்செல்வன், அஸ்வத்தாமன் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காரியகர்த்துக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.