சமீபகாலமாகவே, திருமணமான மணப் பெண்கள், தங்கள் கணவன்களை கொல்வது வாடிக்கையாகி வருகிறது. இப்போதும் ஒரு மணப்பெண் முதலிரவில் தலையில் சேலையால் முக்காடு..! கையில் கத்தி..! கிட்ட வராதே.. தொட்டால் 35 துண்டுகள் தான்..! என்ற செய்தி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் ஏடிஏ காலனி பகுதியை சேர்ந்த கேப்டன் நிஷாத்திற்கு, கர்ச்சனா தீஹா கிராமத்தை சேர்ந்த சித்தாரா என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் 29 -ந் தேதி பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் நடந்தது.
மறுநாள் அதாவது ஏப்ரல் 3-ந் தேதி அன்று மணமகள் புகுந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.. குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ தம்பதி இருவருக்கும் மே 2-ந் தேதி, வெகு பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடத்தப்பட்டது. இதையடுத்து, மணமக்களுக்கு முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதலிரவு அறைக்குள் மணமகன் உள்ளே நுழைந்தபோது, தலையில் சேலையால் முக்காடு அணிந்து, ஒரு மூலையில் சித்தாரா உட்கார்ந்திருந்தார். அவரது கையில் கூர்மையான கத்தி இருந்தது. இதைப்பார்த்து மணமகன் நிஷாத் அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது சித்தாரா, “என்னை தொடாதே.. கிட்ட வராதே.. எனக்கு அமன் என்ற காதலன் இருக்கிறான்.. நான் அமனுக்கு சொந்தமானவள்.. இந்த கல்யாணத்தை பிடிக்காமல் செய்து கொண்டேன். கட்டாயப்படுத்தி உன்னை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அமன் மட்டுமே என்னை தொட முடியும். நான் அவனுடன்தான் வாழ ஆசைப்படுகிறேன். இவ்வளவு சொல்லியும், அதையும் மீறி என்னை தொட்டால் உன்னை 35 துண்டுகளாக பீஸ் பீஸாக வெட்டிவிடுவேன்” என்று மிரட்டினார்.
மணமகன் நிஷாத், இதைக்கேட்டதுமே ஆடிப்போய் நின்றுவிட்டார்.. இரவு ரூமை விட்டு வெளியே வர முடியாமல், அங்கேயே சோபாவிலேயே விடிய விடிய உட்கார்ந்திருக்க மறுநாளும் இதை பற்றி வீட்டில் யாரிடமும் சொல்ல மணமகனுக்கு தைரியம் வரவில்லை. மேலும் தொடர்ந்து 3 நாட்களும் சோபாவிலேயே படுத்து எழுந்து நிஷாத் சென்றார்.
இதற்கு பிறகுதான் மணமகன் நிஷாத் குடும்பத்தாருக்கு விஷயம் தெரிந்துள்ளது. இதுகுறித்து சித்தாராவிடம் கேட்டதற்கு, “ஆமாம், நான் அமன் என்பவரை காதலிக்கிறேன்; என் பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் இந்த திருமணத்தை செய்துகொண்டேன் என்று சிறிதும் சலனமில்லாமல் துணிச்சலாகவும், தீர்க்கமாகவும், உண்மையை சொன்னார்.

இதையடுத்து, 2 குடும்பத்து பெரியவர்களும் இதுகுறித்து பேசினார்கள். நாளடைவில் அனைத்தும் சரியாகிவிடும் என்று மணமகன் உட்பட அனைவருமே எதிர்பார்த்து, தாலி கட்டிய கணவருடன்தான் சித்தாரா வாழ வேண்டும் என்று முடிவாக சித்தாராவும், கணவருடனேயே வாழ்வதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். ஆனால், மணமகனுக்கு சோபாவிலேயேதான் பொழுது கழிந்துள்ளது.
ஆனால், மே 30-ந் தேதி நள்ளிரவு, வீட்டின் பின்பக்க சுவர் ஏறி குதித்து சித்தாரா தப்பி சென்றுவிட்டார்.. இது அங்கிருந்த சிசிடிவி காட்சியிலும் பதிவாகியுள்ளது. இதை மணமகன் குடும்பத்தினர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம். இது குடும்ப பிரச்சனை என்பதால், 2 தரப்பிலுமே பேசி தீர்த்துக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக கூறிவிட்டதால், இதுகுறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.