கும்பகோணத்தில் இரட்டையர் பாமா, ருக்மணி தங்களுக்கு இன்னும் திருமணமாகாத வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று திருப்பூரில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்த பெண் ராஜ்மதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் காமாட்சி ஜோதிடர் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தியாகராஜன் என்பவரின் இரட்டை மகள்கள் பாமா, ருக்மணி. 34 வயதாகியும் தங்களுக்கு இன்னும் திருமணமாகாததால் இரட்டையர் சகோதரிகளும் வருத்தத்திலும், கவலையிலும் இருந்து வந்துள்ளனர். தன் வயதுடைய பெண்கள் குழந்தை, குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்களே என்று ராஜ்மதி மிகுந்த கவலைக்கும் ஆளானார்.
இதனால் மனவேதனையடைந்த சகோதரிகள் இருவருமே வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விஷம் அருந்தி வீட்டிற்குள் மயங்கிக் கிடந்த இருவரையும் உறவினர்கள், மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் 2 பேருமே சிகிச்சை பலனின்றி இறந்தனர். இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த சம்பவம் அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நேற்றைய முன்தினம், திருப்பூரில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான பெண் ராஜ்மதி.. கடந்த சில வருடங்களாக வித்யாலயம் அடுத்த பாரதி நகரில் தங்கி திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.. இதற்காக வரன்களை பார்க்க துவங்கியுள்ளனர். அதன்படியே ஒவ்வொரு மாப்பிள்ளையும், ராஜ்மதியை பெண் பார்க்க வந்தார்கள்.. மாப்பிள்ளை வீட்டார் வரும்போதெல்லாம் ராஜ்மதி தன்னை அலங்காரம் செய்து காத்திருப்பார்…
மாப்பிள்ளை வீட்டினரும், பெண்ணை பார்த்துவிட்டு செல்வார்களே தவிர, சம்மதம் சொல்வதேயில்லை. யாராவது ஒரு மாப்பிள்ளை தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார்களா என்று ராஜ்மதி காத்திருந்தும், கடைசிவரை அவருக்கு ஏமாற்றமே.. ஒவ்வொரு முறையும் பெண் பார்க்க வரும்போதெல்லாம், ஏமாந்து போவதால், விரக்திக்கு ராஜ்மதி ஆளானார். கடைசியில் நேற்றைய முன்தினம் ராஜ்மதி தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை கண்டு பெற்றோர் கதறி அழுதது காண்போரை உலுக்கி எடுத்தது.,