கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், சின்னம்பாளையம் கிராமம், விஜய் நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி விநாயகர் திருக்கோயில் மகர லக்னத்தில் பரிவார தெய்வங்களுக்கும் புணராவர்த்தன “அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்”இனிதே நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெற்றது. அது சமயம் திரளான அனைத்து பக்தக் கோடி பெருமக்களும், ஊர் பொதுமக்களும், இந்த மகா கும்பாபிஷேக பெருவிழாவில், அனைத்து தெய்வங்களின் அருள் ஆசிகளும் பெற்று கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.