கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை தாலுக்கா கோட்டூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்கோதிபாளையம் கிராமத்தில் திருமணமான பெண் தூக்கு போட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட நிலையில் இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உள்ளார்.
இந்நிலையில், மருத்துவ அறிக்கையில், அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக அந்த பெண்ணின் கணவனை கைது செய்ய வேண்டும் என்று கூறி பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனை முன்பு மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.