வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன் என வாரணவாசி சமத்துவபுரத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய, ‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்’ வாசகம் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. திமுக சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க நமது ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா பிறந்தநாளான இன்று தமிழ்நாடெங்கும் 68,000க்கும் மேற்பட்ட பூத் வாரியாக உறுதி மொழியை முன்மொழிய உள்ளனர்.
அதாவது, நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரத்தை குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்.

ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். ‘பெண்கள் – விவசாயிகள் – மீனவர்கள் – நெசவாளர்கள் – தொழிலாளர்கள்’ என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்” என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, அரியலூர் மாவட்டம், திருமானூர் மத்திய ஒன்றியம் வாரணவாசி சமத்துவபுரம் (பாகம் எண் 132) பகுதியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அவர்களின் வழிகாட்டுதல்படி, “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றிய கழக துணை செயலாளர் தமிழரசி சுந்தர் ஓரணியில் தமிழ்நாடு குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.