இந்திய அரசியல் வரலாற்றில்… பிரசாரம் அடிப்படையில்… கரூரில் ரசிகர்களை காவு வாங்கிய துயரச் சம்பவம். நாட்டையே உலுக்கிய நிலையில்… நாற்காலிக்கு ஆசைப்பட்டு, விளம்பர வெறிக்காக ரசிகர்கள் 41 பேரின் உயிர்களைப் பலி வாங்கிய தவெக தலைவர் விஜயின் ஆணவம் இன்னும் அடங்கவில்லை என்பதையே 3 நாட்கள் கழித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட ஷூட்டிங் வீடியோவில் காட்டுகிறது.
அந்த ஷூட்டிங் வீடியோவில் ‘எனக்காக உயிர் இழந்துவிட்டார்களே’ என்று அனுதாப வார்த்தையும், ஆறுதலும் இல்லை. ஆனால் இன்னும் வருவேன், இப்படித்தான் நடந்து கொள்வேன்’ ‘என்னை எவன் கேட்க முடியும்?’ என்ற ஆணவம், திமிர், அலட்சியம், அகங்காரம் தான் இருந்தது. தனது ரசிகர்களுக்காகக் கூட இரங்காத விஜயின் உள்ளம் யாருக்காக இரங்கப் போகிறது. வருத்தம் இல்லை, மன்னிப்பு கேட்கவில்லை விஜய். ஆனால், பனையூரில் பதுங்கியவாறு வீடியோ வெளியிடுகிறார்.
விஜய்யின் ரசிகர்கள் உயிரற்ற உடல்கள் சரிவதைக் கேள்விப்பட்ட பிறகும் நெஞ்சில் ஈரம் இல்லாமல் கரூரை விட்டு ஓடிய விஜய், திருச்சி விமான நிலையத்திலோ, சென்னை விமான நிலையத்திலோ அல்லது பனையூர் வீட்டுக்கு முன்பாகவோ நின்று ஊடகங்கள் மூலமாக, அஞ்சலி செலுத்தி இருக்கலாம்.
காலை 8.45 மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு சென்னை விமான நிலையத்திலேயே 8.45 மணிக்கு தான் புறப்பட்டு மதியம் 3 மணிக்கு அதாவது 6 மணி நேரம் தாமதமாக வந்தது ஏன்? என்பதற்கு அவர் அந்த வீடியோவில் விளக்கம் சொல்லி இருந்தால் விஜயை மனிதராக நினைக்கலாம். மதியம் 12 மணிக்கு கரூர் வருவதாகச் சொல்லி மக்களை காலை முதலே காக்க வைத்து விட்டு இரவு 7 மணிக்கு வந்ததும் யாருடைய ‘சதி’?
மேலும் ஏற்கனவே விஜய் போன இடங்களில் எல்லாம் மக்கள் மயங்கி விழுந்துள்ளார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தனது ஆணவம், அலட்சியம் மற்றும் அகங்காரத்தால் தான்தோன்றித்தனமாக செயல்பட்டார். இவற்றின் விளைவு 41 உயிர்கள் பறிபோனது. 41 உயிர்களின் ஓலம் விஜய்யின் கல்நெஞ்சை கரைக்கவில்லை. ஆனால் எந்த ஒரு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் எனக்காக கொடுக்கப்பட்ட இடத்தில் தான் பேசினேன். இதில் என் தவறு ஒன்றுமில்லை சினிமா முகபாவனையுடன் தவெக தலைவர் விஜய் பனையூரில் இருந்தவாறு மீண்டும் ஒரு ஷூட்டிங்கை நடத்தியிருக்கிறார்.
‘கரூரில் மட்டும் எப்படி நடந்தது?’ என்று பனையூரில் மல்லாக்க படுத்துட்டு விட்டத்தைப் பார்த்து விஜய் கேள்வி கேட்கிறார். செப்டம்பர் 27-ந் தேதி திருவள்ளூர் மற்றும் வட சென்னையில் பிரசாரம் மோற்கொள்ள வேண்டிய விஜய் டிசம்பர் 13-ந் தேதி சேலம், நாமக்கல் மற்றும் சேலம் பிரசாரம் மோற்கொள்ளும் தேதியை ஏன் எதற்காக திடீரென்று தனது சுற்றுபயணத்தை மாற்றினார் ? முன்கூட்டியே கரூருக்கு வந்த சதியை விஜய்தான் விளக்க வேண்டும்.
விஜயை பார்க்க வந்தவர்கள் 110 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவர் மருத்துவச் செலவையும் அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. அன்று ஈழத் தமிழர்களுக்கு ரசிகர் மன்றம் சார்பாக ரூ. 500 நன்கொடை கொடுத்தது போல ஏதாவது ரசிகர் மன்றத்தை வைத்து ஒரு ஆயரமோ, ஐநூறோ கொடுக்க சொல்லலாம் என்று நினைக்கும் போது திடீரென முதலமைச்சர் சம்பவம் நடந்த உடனேயே நள்ளிரவில் கரூருக்குச் சென்று அனைவரையும் பார்த்து ஆறுதல் சொல்லி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கே ரூ. 2 லட்சம் என முதலமைச்சர் கொடுத்ததால் விஜய்க்கு கோபம் வராதா என்ன? அதனால் செந்தில் பாலாஜி மற்றும் ஸ்டாலின் மீது பாய்கிறார் விஜய். அய்யோ தன்னிடம் இருக்கும் பணம் போகப் போகிறதே என்ற ஆத்திரத்தில், ‘என்னைக் கைது செய்யுங்கள்’ என்று விஜய் சவால் விடுகிறார்.
இந்நிலையில், கரூர் சம்பவத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் , கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மூவரும் தலைமறைவாக இருந்த நிலையில் மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டு மற்ற இருவர் இன்னமும் தலைமறைவாகவே இருக்கிறார்கள். அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து அவர்கள் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது விசாரணை நடந்து அவர்களுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் கட்சியில் பல அதிரடி மாற்றங்களை தவெகவில் செய்து வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும், காரைக்கால் தவெக வழக்கறிஞர் அணியினர் சிலர் தவெக-வின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என கூறி வெளியேறியது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கார்குடியை சேர்ந்த பிரியதர்ஷினி ஒன்றிய மகளிரணி நிர்வாகி பெண்களுக்கு மதிப்பில்லை என கூறி விலகியது. அதன் தொடர்ந்து, தவெகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பேசி பிரபலமடைந்த கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி உயர்மட்ட நிர்வாகிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லை என கூறி விலகியது. தவெக நிர்வாகி ஹரிஷ், விஜய்யை சுற்றி தவறுகள் நடந்து கொண்டே இருக்கு விஜய் புஸ்ஸி ஆனந்த் 100% நம்புகிறார். ஆனால் புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு விஸ்வாசமாக இல்லை என வெளிப்படையாக குற்றம் சாட்டி வெளியேறினார்.
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்… துணிவும் வரவேண்டும் தோழா… பாதை தவறாமல் பண்பு குறையாமல்…. பழகி வரவேண்டும் தோழா… இந்த MGR-ன் பாடல் வரிகளை மதித்து தவெக தலைவர் இவற்றையெல்லாம் விஜய் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவு நாம் என்ன சொன்னாலும் விஜய் கேட்டுக் கொள்வார் என்ற மனநிலை பல முடிவுகளை விஜய்க்கு தெரிந்தோ, தெரியாமலோ செய்து வந்துள்ளார்.
மேலும் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளில் பெரும் கூட்டங்களை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் தொண்டர் படையை உருவாக்கி எங்கெல்லாம் கட்சி சார்பில் கூட்டம், பேரணி நடக்கிறதோ அங்கெல்லாம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தொண்டர்களை மட்டுமே கொண்ட தவெகவில் தொண்டர் படை உருவாகாதலால் வந்த வினைதான் கரூர் சம்பவம்.
இந்நிலையில் சம்பவத்தன்று அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்தும், உயிர்ச்சேதம் ஏற்படும் சூழல் உருவாகலாம் என பலமுறை எச்சரித்தும் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்பதே காவல்துறையின் விளக்கம். மேலும் நாமக்கல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு கரூர் புறப்பட்ட விஜய் வேலாயுதபாளையத்திற்கு மாலை 4:45 மணிக்கே வந்துள்ளார் எனவும் வேலுச்சாமிபுரம் வர 4 மணிநேரம் தாமதப்படுத்தியுள்ள என காவல்துறை தரப்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தினமும் செய்தித்தாள்களை படித்து இன்று என்ன செய்தி என்பதை அவர்களின் விரல் நுனியில் வைத்திருந்தனர். அதேபோல MGR மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உதவியாளர்கள் மூலம் இன்று என்ன செய்தி என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல இரண்டாம் கட்ட தலைவர்களின் உதவியுடன் தலைச்சிறந்த தலைவர்களாக செயல்பட்டு வந்தனர். ஆனால் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் குறித்து கருத்து தெரிவித்து சிலர் தவெகவை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களை நம்பியதால் விளைவு இன்று 41 பேர் உயிர் பலி என்ற பழியை சுமக்கும் நிலைக்கு விஜய் தள்ளப்பட்டுள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.