தமிழக அரசு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படை உருவாக்கிய நான்கே நாட்களில், பெண் போலீசே கூட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை ஆயுதப்படைப் பிரிவில் 30 வயது திருமணமான பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த பெண் காவலர், மானாமதுரை அருகே தூதை கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் ராபின் என்பவருடன் தவறான தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், பெண் காவலரை ராபின் உல்லாசத்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதையடுத்து சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டப பகுதியில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். முன்னதாக, ராபின், தனது நண்பர்களான சித்தாலங்குடி கிராமத்தை சேர்ந்த தவெக பிரமுகர் மகாராஜா மற்றும் ஹரீஸ் இருவருக்கும் அலைபேசியில் தகவல் தெரிவித்து திருமண மண்டபம் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் நண்பர்கள் இருவரும் அங்கு வந்ததை பார்த்து பெண் காவலர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால் 3 பேரும் சேர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து ஒருவழியாக தப்பித்து அரை நிர்வாணமாக ஓடிய பெண் காவலர், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சென்று தஞ்சமடைந்து ஆடை தருமாறு கேட்டுள்ளார். பின்னர் 100-க்கும் போன் செய்து தகவலை கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிவகங்கை ரோந்து காவலர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், பெண் காவலரை பத்திரமாக மீட்டனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின்பேரில், உதவி காவல் கண்காணிப்பாளர் அமல அட்வின், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி ஆகியோர் விசாரணை நடத்தி ராபின், மகாராஜா, ஹரீஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
தமிழக அரசு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படை உருவாக்கிய நான்கே நாட்களில், பெண் போலீசே கூட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.