செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால் அது தொடர்பாக மனுவை தாக்கல் செய்து இருக்கலாம். அவர் உரிய மனுவை SC யில் தாக்கல் செய்யலாம். அதன் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் அதில் அனுமதி பெற்று அவர் அமைச்சராகலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
அதிமுகவில் V. செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக வழக்கின் தீர்ப்பில் உள்ள கடுமையான கருத்துகளை நீக்க கோரி மனு அளித்து இருந்தார். லஞ்சம் மற்றும் பணமோசடி வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா தலைமையிலான அமர்வு அளித்த சில கருத்துகளை நீக்கக் கோரி முன்னாள் தமிழக அமைச்சர் V. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.
நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, விண்ணப்பத்தின் நேரம் மற்றும் நோக்கத்தை ஆராய்ந்தது. “நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா ஓய்வு பெற்ற பிறகு இந்த விண்ணப்பத்தை ஏன் தாக்கல் செய்ய வேண்டும்?” என்று நீதிபதி காந்த் விசாரித்து, செந்தில் பாலாஜியின் நடவடிக்கையின் நியாயத்தன்மையை கேள்விக்குள்ளாக்கினார்.
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனு நல்ல நோக்கம் கொண்டது அல்ல என்றும், சட்ட செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதாகவும் விவரித்தார். செந்தில் பாலாஜி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜாமீன் உத்தரவை கொடுக்கும் போது அமைச்சராக கூடாது என்று தடை எதுவும் இல்லை. வழக்கில் நேரடியாக உத்தரவில் அப்படி எதுவும் கூறப்படவில்லை. அமைச்சராவது எதிராக நீதிமன்ற தீர்ப்பில் எதுவும் இல்லை. செந்தில் பாலாஜி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார். அவர் விசாரணையை எதிர்க்கவில்லை. அப்படி இருக்க.. அவர் அமைச்சராவதை தடுக்க முடியாது.
இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எதிராக கடுமையான கருத்துக்களை நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. ஆனால் வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை ஆகும் முன்.. நீங்கள் அமைச்சராக விரும்பினால் அதற்கான மனுவை தாக்கல் செய்யலாம். செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால் அது தொடர்பாக மனுவை தாக்கல் செய்து இருக்கலாம். அவர் உரிய மனுவை SC யில் தாக்கல் செய்யலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.