ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த திமுக பிரமுகரான சந்தோஷ் என்பவர் சரண்யா மனைவி மற்றும் சாத்விகா என்ற மகளுடன் தருமபுரி கோட்டை கோயில் அருகே டிஎன்வி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
அவர் இறப்பதற்கு முன்பு வீடியோ வெளியீட்டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அந்த வீடியோவில், நான் என் மனைவி மகளுக்கு தான் வாழ்ந்தேன். அவர்களை கொன்று விட்டேன். நானும் கொஞ்ச நேரத்தில் செத்துடுவேன்.அம்மாவை கொல்லலான்னு நினைச்சேன் முடியல.. தனக்கு யாரெல்லாம் பணம் தர வேண்டும் என்ற விபரங்களையும், அவர் யாருக்கெல்லாம் பணம் தர வேண்டும் என்ற விபரங்களையும் குறிப்பிட்டு தான் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் தனது சொத்துகள் அனைத்தும் மனைவியின் தம்பிக்குச் செல்ல வேண்டும் என்று கூறியது மட்டுமின்றி யாரும் ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட் செய்யாதீர்கள்.. அம்மா சீக்கிரம் செத்துடும்மா… என பேசி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஒரு வீடியோ பதிவை சந்தோஷ் அனுப்பியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.