திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள வெள்ளகோவில் பகுதியில் தபால்காரராக வேலைசெய்து வருபவர் செந்தில்குமார். இவர் பொதுமக்களுக்கு வரும் தபால்களை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்காமல் இவரின் வீட்டிலேயே பதுக்கி வைப்பதாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து தபால்காரர் செந்தில்குமார் வீட்டில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 மூட்டை தபால்கள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தியது.