பீகார் மாநிலத்தில் உள்ள “ஷாபூர் படோரி” ரயில் நிலையத்தில், ஒரு தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் இரண்டு பெண்களும் ரயில் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த ஒரு சரக்கு ரயில் திடீரென வந்தது. அப்போது ரயில் நடைமேடைக்கு, தண்டவாளத்திற்கும் இடைவெளியில் ஒளிந்துகொள்ள முடிவு செய்தனர்.
அந்தத் தாய் ஒரு நொடிகூடத் தயங்காமல், தன் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகத் தன் உடலால் அவர்களை மூடினார். இறுதியில், அந்தச் சம்பவத்தில் அனைவரும் உயிர் தப்ப, அந்தத் தாய்க்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டன. இந்த வீடியோ சமூக வைரலாகி வருகின்றது.