மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா சின்னபூலாம்பட்டியை சேர்ந்த தங்கவேல் அவர்களின் இ-கார்டில் மனைவியின் போட்டோவுக்கு பதில் மதுபாட்டில் படம் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் தமிழக அரசு குடும்ப அட்டை தாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை தந்து வருகிறது.. அதேபோல, குடும்ப அட்டைகளில் குறைகள் எதுவாக இருந்தாலும், அவைகளை களைந்து கொள்வதற்காக முகாம்களையும் மாதந்தோறும் அரசு நடத்தி வருகிறது.. எனினும் குடும்ப அட்டைகள் அச்சிடுவதிலேயே பிழைகள் இருப்பது, பொதுமக்கள் தரப்பில் சிலசமயம், அதிருப்தியை ஏற்படுத்துவதும் ஆங்காங்கே ஒருசில சலசலப்புகள் கிளம்பி விடுகின்றன.
நாட்டில் அனைத்துவிதமான சேவைகளுக்கும் இன்றியமையாத ஆவணமாக குடும்ப அட்டை கள் உள்ளது. எனவே, குடும்ப அட்டைகள் விஷயத்தில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஒரு குடும்பம் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டை களை வைத்து இருந்தால் அல்லது தவறான தகவல்களைக் கொடுத்து குடும்ப அட்டை பெற்று இருந்தால், அந்தக் குடும்ப அட்டை ரத்தும் செய்து விடுகிறது.
ஒரு குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இறந்தாலோ அல்லது தமிழ்நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறினாலோ, அந்தக் கார்டு ரத்து செய்யப்படலாம்.. திருமணம் ஆன பெண்கள், அவர்களின் பெயரை கணவரின் குடும்ப அட்டைகளில் சேர்த்த பிறகு, பழைய அட்டைகளில் இருந்து நீக்கப்படாமல், 2 அட்டைகளிலும் பெயர் இருந்தால், அந்த அட்டை ரத்து செய்யப்படலாம்.
நீண்ட காலத்துக்கு நியாய விலை பொருட்களை வாங்காமல் இருந்தால், அந்த அட்டை பயன்பாட்டில் இல்லாததாக கருதி ரத்து செய்யப்படலாம்.. போலியான ஆதார் அட்டை, முகவரிச் சான்றிதழ், போலி ஆவணங்களை தந்து அட்டை வாங்கியிருந்தால், அதுவும் ரத்து செய்யப்படும்.. இப்படி பல்வேறு காரணங்களால் அட்டைகள் ரத்து செய்யப்படும் நிலையில், அட்டை விநியோகித்ததிலேயே பிழை உள்ளதாக புகார்கள் எழுவது பெருகி விட்டது.
இந்நிலையில் மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா சின்னபூலாம்பட்டியை சேர்ந்த தங்கவேல். இவரது மனைவி பெயர் ஜெயப்பிரியா. இவரது மனைவி குடும்ப அட்டையில் குடும்பத் தலைவராகவும், தங்கவேல் குடும்ப உறுப்பினராகவும், இவரது மகன், மகள் உறுப்பினராகவும் இருந்தனர்.
இதனிடையே, இவர்களது மகளுக்கு திருமணம் நடந்துள்ளது.. எனவே, மகளின் பெயரை குடும்ப அட்டையில் இருந்து இசேவை மையத்தில் நீக்கம் தங்கவேல் செய்தார். பிறகு குடும்ப அட்டையை வாங்கி பார்த்தால், மனைவியின் போட்டோவுக்கு பதில் மது பாட்டில் போட்டோ இருந்ததைகண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் தங்கவேல். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தங்கவேல் பேசுகையில், “கடந்த வாரம் நல வாரியத்தில் பதிவு செய்வதற்காக என்னுடைய மனைவி சென்று இருந்தேன்.
அப்போது குடும்ப அட்டையில் மகள் பெயர் நீக்கமாகியும், என்னுடைய மனைவியின் போட்டோவுக்கு பதில் மது பாட்டில் போட்டோவும் இருந்து இருக்கிறது. நாங்கள் இன்னும் அப்டேட் செய்யப்பட்ட குடும்ப அட்டையை வாங்கவில்லை. ஆனால் இ-கார்டில் இப்படி மதுபாட்டில் படம் இருந்துள்ளது. அதனை பார்த்து நலவாரியத்தில் பதிவு செய்ய முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்” என தெரிவித்தார்.