அரியலூர் நகராட்சி தூய மேரி தொடக்கப்பள்ளியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் 2022 செப்டம்பர் 15-ந் தேதி மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி, முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

இத்திட்டம் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவும், அடுத்த வருடமே அதாவது 2023 ஆகஸ்ட் 25-ந் ம் தேதி திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் இந்த காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் மு.க. ஸ்டாலின் செய்து இருந்தார். அதேபோல 3 நாட்களுக்குமுன்புகூட, தமிழக முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து தன்னுடைய தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இயிருந்தார்.. அதில், “காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது. அவர்களின் அறிவு வளர்கிறது. பெற்றோரின் மனதில் மகிழ்ச்சிப் புன்னகை மலர்கிறது. தமிழ்நாடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

இத்திட்டத்தில், இனி 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள். நீதிக்கட்சி முதல் நமது திராவிட மாடல் அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்” என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “வரும் 26 அன்று நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறோம். நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும். தமிழ்நாடு நாளும் உயரும்” என்று முதலமைச்சர் பதிவிட்டு இருந்தார்.

அதன்படியே, 2,429 நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.. 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் அரியலூர் நகராட்சி தூய மேரி தொடக்கப்பள்ளியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.