கர்நாடக வங்கியில் பணபரிவர்தனை செய்ய ஒரு இஸ்லாமிய பெண் கன்னட மொழியில் வங்கி பெண் அலுவலரிடம் பேச வங்கி பெண் ஊழியரோ கன்னடத்தில் பேசாதே ஹிந்தியில் பேசு என வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கடந்த மே மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூரு சந்தாபுரா பகுதியில் உள்ள SBI வங்கியில், வாடிக்கையாளர் ஒருவர் மேலாளரிடம் தனது கணக்கு தொடர்பான சந்தேகங்களை கேட்க முயன்றபோது அப்போது மேலாளர் கன்னட மொழியில் பேச மறுத்து, ஹிந்தி பேச அறிவுறுத்தி வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட ஆதரவு ஆர்வலர்கள் குழுக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், கர்நாடக வங்கியில் பணபரிவர்தனை செய்ய ஒரு இஸ்லாமிய பெண்மணி வந்துள்ளார். அவர் கன்னட மொழியில் வங்கி பெண் அலுவலரிடம் பேசியுள்ளார். ஆனால் வங்கி பெண் ஊழியரோ கன்னடத்தில் பேசாதே ஹிந்தியில் பேசு என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.