கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற காலை உணவுத் திட்டத்தை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தொடக்கி வைத்தார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் 2022 செப்டம்பர் 15-ந் தேதி மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி, முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவும், அடுத்த வருடமே அதாவது 2023 ஆகஸ்ட் 25-ந் ம் தேதி திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் இந்த காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் மு.க. ஸ்டாலின் செய்து இருந்தார்.

அதேபோல 3 நாட்களுக்குமுன்புகூட, தமிழக முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து தன்னுடைய தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இயிருந்தார். அதில், “காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது. அவர்களின் அறிவு வளர்கிறது. பெற்றோரின் மனதில் மகிழ்ச்சிப் புன்னகை மலர்கிறது. தமிழ்நாடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற காலை உணவுத் திட்டத்தை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் இரங்கநாயகி இராமச்சந்திரன், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி, மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்துசாமி, மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், கிழக்கு மண்டலம் AEE ராஜேஷ் கண்ணா, உதவி பொறியாளர்கள் ஃபெர்மான் அலி, ராஜராஜேஸ்வரன்,சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு, மகாத்மா காந்தி நினைவு நூற்றாண்டு பள்ளி ஆசிரியர் ,ஆசிரியைகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.