முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக வெள்ளக்கிணறு குட்டை பகுதியில் நீர்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு இன்று 26.8.2025 பகல் 02.22 மணிக்கு துவங்கி, நாளை 27.8.2025 மாலை 03.52 வரை சதுர்த்தி திதி உள்ளது. வளர்பிறை சதுர்த்தி அன்று காலை சூரிய உதய நேரத்தில் சதுர்த்தி திதி இருக்க வேண்டும் என்பதால் நாளை 27.8.2025 விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.
விநாயகர் சதுர்த்தி அன்று புதிதாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வந்து வழிபடுவது வழக்கம். இன்று மாலை 04.50 முதல் 05.50 வரை அல்லது மாலை 06.30 முதல் இரவு 08.30 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைக்கலாம். இன்று விநாயகர் சிலையை வாங்கியவர்கள், நாளை காலை 6 மணி முதல் 07.20 வரையிலான நேரத்தில் வழிபாடு செய்யலாம்.
மேலும் வீட்டிற்கு அருகில் பொது இடத்தில் விநாயகர் சிலை அமைத்திருந்தால், அந்த சிலைகளுடன் வீட்டில் இருக்கும் சிலையையும் கொண்டு போய் கரைப்பதற்காக வைத்து விடலாம். அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள நீர்நிலைக்கு எடுத்துச் சென்று கரைக்கலாம். வீட்டிற்கு அருகில் நீர் நிலைகள் எதுவும் இல்லையென்றால், வீட்டில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்து, அதற்குள் விநாயகர் சிலையை வைத்து கரைக்கலாம். அந்த தண்ணீரை நாம் நடந்து செல்லும் பாதையில் ஊற்றக்கூடாது. கால் படாத இடத்திலோ அல்லது பூந்தொட்டியிலோ ஊற்றுவது நல்லது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் பகுதியில் விநாயகர் ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வெள்ளக்கிணறு குட்டை பகுதியில் சிலைகளை கரைப்பதற்காக நீர்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் நடக்கும் ஊர்வலத்தன்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.