அரியலூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே நகராட்சி AITUC சுகாதார தொழிலாளர் சங்கத்தின் உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனத்தின் மாநிலச் செயலருமான டி.தண்டபாணி தலைமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் நகராட்சியில், பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூ.330 கூலி வழங்கப்பட்டு வருவது, தொழிலாளர்களிடமிருந்து பிடித்து வரும் EPF தொகையை 12 சதவீதம் செலுத்தாமல், குறைத்து செலுத்தி வருவது ஆகியவற்றை கண்டித்தும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் உள்ளாட்சித் தொழிலாளர்களுக்காக பிறப்பித்த அரசாணையின் படி நிர்ணயித்த மாத ஊதியமாக ரூ, 16,780 வழங்கப்பட வேண்டும்.
மேலும், EFI மருத்துவ அட்டை வழங்கப்படாதவர்களுக்கு உனடியாக வழங்கிட வேண்டும். திருச்சி தொழிலாளர் அணையர் முன்பு ஒப்புக்கொண்டவாறு ஆட்சியர் அறிவித்த 31 மாத தினக்கூலி நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். கூடுதல் தூய்மைப் பணியாளர்களை நியமிக்கவேண்டும். ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, தேசிய விடுமுறையை வழங்கிட வேண்டும். மாதம் 4 நாள்கள் சம்பளம் பிடிப்பதை கைவிட வேண்டும். பழுதாகி கிடக்கும் தள்ளுவண்டிகளை மாற்றி புதிய வண்டிகளை வாங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் AITUC சுகாதார தொழிலாளர் சங்கத்தின் உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனத்தின் மாநிலச் செயலருமான டி.தண்டபாணி தலைமை வகித்து, கண்டன உரையாற்றினார். AITUC துணைத் தலைவர் தனசிங், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சிவக்குமார், ஜி.மருதமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் ஜி.ஆறுமுகம், அரியலூர் ஒன்றியச் செயலர் து. பாண்டியன், நிர்வாகிகள் ரெ. நல்லுசாமி, பொன்னம்மாள், நாகூரான், கத்தவராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.