திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா மல்லனம்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளியில் நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கே பி முருகன் தலைமையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் இன்று நடைபெற்றது.
இந்த முகாமில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகதுரை அவர்கள், தெற்கு ஒன்றிய செயலாளர் கனி குமார் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி செயலாளர் ஜெயச்சந்திரன் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி அவர்கள், (வ. ஊ ) மணி மார பாண்டியன் அவர்கள், (கி. ஊ ) தனி வட்டாட்சியர் சிவகுமார் ( ஆதிதிராவிடர் நலம் ) அவர்கள், துணை வட்டாட்சியர் (பொது) புவனேஸ்வரி அவர்கள் மற்றும் மல்லனம்பட்டி ஊராட்சி செயலாளர் கருணாகரன் முதலையானோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, வேளாண் துறை, மீன்வளத்துறை, பத்திர பதிவுத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளிட்ட 15 துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.