அரியலூர் மாவட்டம் , காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி தலைமையில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி அவர்களிடம் 20 பேர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி அவர்கள், உடனடியாக உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.