தென்காசி மாவட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “கரண்ட் திடீரென வருவதும் போவதுமாக உள்ளது, எப்பொழுது மின்சாரம் வருகிறது, போகிறது என்று தெரியவில்லை” என்று பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றது.
ஆகையால், தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான மின்வெட்டு மற்றும் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும் பிரச்சனைக்கு, அரசு போர்க்கால அடிப்படையில் தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பேசுகையில், 100 நாள் வேலைத் திட்டத்தை நம்பியிருந்த மக்களின் வயிற்றில் அடித்தது மோடி அரசாங்கம், விலைவாசி உயர்வு, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு, நூறுநாள் வேலைத் திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றை பாஜக அரசு கைவிட வலியுறுத்தி சிபிஐ(எம்) ஜூன் 19 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக பெ. சண்முகம் தெரிவித்தார்.