திருமணம் செய்வதாக உல்லாசமாக இருந்து ஏமாற்றிய காதலன் மீது புகார் அளிக்க வந்த இளம் பெண் மென்பொருள் பொறியியலாளருக்கு வாட்ஸ் ஆப் மூலம் உல்லாசத்திற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக விருகம்பாக்கம் உதவி ஆணையர் மற்றும் பெண் ஆய்வாளர் ஆகியோரை சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளராக பணியற்றும் பிரியா கனடாவில் பொறியாளராக பணியற்றும் தினேஷ் என்பவரை காதலித்து வந்தார். போனிலேயே இருவரும் காதலை வளர்த்து வந்தனர். கனடாவிலிருந்து தினேஷ் விடுமுறைக்கு சென்னை வந்தபோது, பிரியாவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் பல இடங்களுக்கு சென்று ஜாலியாகவும் இருந்துள்ளனர். ஆனால் அதற்கு பிறகுதான், தினேஷூக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற விஷயம் பிரியாவுக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா, இதுகுறித்து தினேஷிடம் கேட்க இது தகராறாக வெடித்துள்ளது. அப்போது தினேஷ், உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிடுவதாக மிரட்டு இருக்கிறார். இதனால் செய்வதறியாமல் விழித்த பிரியா, உடனே இதுகுறித்து விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை, பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம், அண்ணாநகர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, சாலையோர வியாபாரிகள் மற்றும் புகார் அளிக்க வந்தவர்களிடம் பணம் வாங்கி சிக்கியது தொடர்பான 5 வழக்குகள் உள்ள பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் விசாரித்து இருக்கிறார்.
மேலும் பிரியாவிடம், எப்படியாவது தினேஷிடமிருந்து நியாயம் பெற்று தருவதாக சொல்லி, பிரியாவிடம் நட்பாக பேசிய பெனசீர் பேகம் தன்னுடைய வீட்டிற்கு தேவையான மளிகை, ஆடம்பர பொருட்கள் என பல லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் பொருட்களையும் பிரியா மூலம் வாங்கி கொண்டுள்ளார். அதேசமயம், பிரியா தந்த புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதற்காகவும், கைது செய்யாமல் இருப்பதற்காகவும் தினேஷிடம் பல லட்சம் ரூபாயை வாங்கி இருக்கிறார் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம்.

அத்துடன் நீதிமன்றத்தில் தினேஷ் முன்ஜாமீன் பெறுவதற்கான உதவிகளையும் பெனசீர் பேகம் செய்து தந்துள்ளார். இந்த முன்ஜாமீனை வாங்கி கொண்ட தினேஷ், உடனடியாக சென்னையில் இருந்து மீண்டும் கனடாவுக்கே கிளம்பி சென்றுவிட்டார். தினேஷ் கனடா சென்ற பிறகுதான், பிரியாவுக்கு அனைத்து உண்மையும் தெரியவந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து நியாயம் கேட்டும் பெனசீர் பேகம் சரியான பதிலை சொல்லாததால், இணை ஆணையர் தீஷா மிட்டலை நேரில் சந்தித்து பிரியா புகார் தந்தார்.
மேலும் பெனசீர் பேகத்துக்கு செய்த செலவுகளையும் ஆவணங்களுடன் சமர்ப்பித்தார். இதையடுத்து, பிரியாவின் புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி விருகம்பாக்கம் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபுவுக்கு இணை ஆணையர் தீஷா மிட்டல் உத்தரவிட்டார். பிறகு உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு , பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி தந்துள்ளார்.

ஆனால், பிரியாவுக்கு நள்ளிரவில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். மேலும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து, தோளின் மீது கை வைத்து தொட்டு தொட்டு பேசினாராம். ஆனால், பெனசீர் பேகம் மீது எந்த நடவடிக்கையும் பாலகிருஷ்ண பிரபு எடுக்கவில்லையாம். “உன்னை பார்த்ததில் இருந்தே எனக்கு வேலையில் கவனம் போகவில்லை. நான் சொல்வதை செய்தால், உனக்கு உதவி செய்கிறேன் என்று கூறி, ஆபாசமாக பேசி இருக்கிறார். பிறகு உல்லாசத்துக்கும் அழைத்தாராம்.
இதனால் மனவேதனையும், அதிர்ர்ச்சியும் அடைந்த பிரியா, நேரடியாக ஆணையரிடமே புகாருடன் சென்றுவிட்டார். விருகம்பாக்கம் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் மீது புகார் தந்தார். இந்த புகாரை கண்ட சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், 2 பேர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். அத்துடன், உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு, பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் ஆகியோரை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.