தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்த கோபிநாத் கடந்த 2019 ஜனவரி மாதம் திருச்சி பொன்மலை கல்கண்டார்கோட்டையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், தான் இருப்புப்பாதையில் பயணச்சீட்டு பரிசோதகராக வேலை செய்வதாக கூறி அறிமுகமானார். பின்னர் இருப்புப்பாதை மற்றும் காவல்துறையில் கோபிநாத்துக்கு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய கோபிநாத், மோகன்ராஜ் மற்றும் இவரது கூட்டாளியான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த அதிமுக மாஜி அமைச்சர் வளர்மதியிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்த சுகந்தி ஆகியோரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோபிநாத், திருச்சி மாநகர குற்றப்பிரிவில் சில தினங்களுக்கு புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் காவல்துறை சுகந்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.